விடைபெற்றது 2022....
விடைபெற்றுச் சென்றது 2022 ....
உலக மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்குமா 2022 ?
பல்வேறு இன்னல்களுக்கும் வாழ்வின் சோதனைகளுக்கும் தப்பித்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனுக்கு இன்னோர் இடியாய் வாழ்வில் இணைந்து கொண்ட இராட்சத நுண்ணுயிரியின் போராயுதம் பேரிடியாய் விளங்கிற்று சென்ற இரு வருடங்களாக.
இவ்வருடமும் இந்நிலை தொடருமா இல்லை விட்டு விலகுமா என்ற கேள்விக்குறியே எந்த மனிதன் கண்ணிலும் காண்கின்ற விடயமாக உள்ளது. இப் புது வருடத்தில் இந்நிலை நீடிப்பது கூடாதென்பதே பலரதும் பேராசையாய் இருக்கும்.
மனிதனுக்கு நம்பிக்கையே சக மனிதன் தானே, ஆக இந்த விடயத்தில் ஒவ்வொர் மனிதனையும் ஆறுதல் படுத்தும் சக தோழன் அவன் சக மனிதனே. அவனையும் விட மனிதனை உலகில் தேற்றக்கூடியது யார் எனும் கேள்விக்கு விடையிருக்கின்றது.
உலகில் தாயின் கருவில் இறைவன் என்ற நிலையை துறந்து மனிதனாக பிறந்த இரட்சகருக்கு இந்த இக்கட்டிலிருந்து விடுதலை தரக்கூடியதும் ஆறுதல் அளிக்கக்கூடியதும் நம்பிக்கை தருகிறதுமான வல்லமை உள்ளது.
பிறந்த இப்புத்தாண்டு எப்போதும் போல புதிய எண்ணங்களையும் புதிய சிந்தனைகளையும் உலக மக்களுக்கு புதிதாக வாரி வழங்கி வருகின்றது. புத்தாண்டை நமக்கு பரிசளிக்க நம் பாவ எண்ணங்களை களைந்தும் நம் பாவ சிந்தனைகளை துறந்தும்விட நமக்காக பலியாக மாணடு பாவங்களை போக்கினார்.
புதிய வருடத்தில் நம்பிக்கை மற்றும் ஆறுதல் தரும் இறைவன் இயேசு கிறிஸ்து பாதம் பணிந்து அவர் பக்கமாய் நாம் திரும்புவோம். உலகம் தரக்கூடாத ஆனந்த பாக்கியம் அவராலே கிடைக்கும்.